மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட நடிகர் திலகம் சிவாஜியின் சிலை அடையாரில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் சிவாஜி கணேசனின் சிலை நிறுவப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகராஜன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கு மீதான விசாரணையின்போது, மனுதாரரின் புகாருக்கு பதில் அளித்த தமிழக அரசு, மெரினா காமராஜர் சாலையில் இருந்து சிவாஜியின் சிலை அகற்றப்பட்டு அடையாறில் கட்டப்பட்டு வரும் அவரது மணிமண்டபத்தில் நிறுவப்படும் எனத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சிவாஜியின் சிலையை கடற்கரை சாலையிலிருந்து பாதுகாப்பாக அகற்றினர். பின்னர், சிவாஜியின் சிலை அடையாரில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது.