புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பதுக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
32 கோடி ரூபாய் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாக கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி வெங்கடசாமி, மூவரும் தலா 5 லட்சம் ரூபாய்க்கான உத்தரவாதமும், இரு நபர் உத்தரவாதமும் சமர்பித்து ஜாமீன் பெற்றுக்கொள்ள அனுமதித்தார். மறு உத்தரவு வரும் வரை நாள்தோறும் சிபிஐ விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.