Case against teachers pt desk
தமிழ்நாடு

கோவை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. 6 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு - RTI-ல் வெளிவந்த தகவல்

கோவையில் அரசுப் பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர், 5 ஆசிரியர்கள் உட்பட 6 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

webteam

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த பட்டியலின மாணவிக்கு அந்த பள்ளியின் 40 வயதான உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற வழக்கு விவரங்களில் இருந்து 6 ஆசிரியர்கள் மீது கூடுதலாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Pocso case

பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், மாணவியின் பெற்றோர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியர், மாணவியை மிரட்டியதாக ஆங்கில ஆசிரியர், அறிவியல் ஆசிரியை, இடைநிலை ஆசிரியர், மற்றொரு பெண் ஆசிரியை உள்ளிட்ட 6 பேர் மீதும் மிரட்டல், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ ஆகிய 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாணவியிடம் மேற்கொண்ட தொடர் விசாரணை அடிப்படையில் மேலும் 12 பேரிடம் பேரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.