தமிழ்நாடு

பாலியல் சீண்டலில் முடிந்த பிறந்தநாள் விழா !

webteam

கோவையில் தனியார் பெண்கள் விடுதியில் இருந்த பெண்களில் சிலரை தனியார் உணவகத்திற்கு அழைத்து சென்று பிறந்த நாள் விழா என்ற பெயரில் தவறாக நடக்க முயன்ற விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் உடந்தையாக இருந்த பெண் விடுதி காப்பாளர் புனிதா மீது 2 பிரிவுகளில் கோவை பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன்ர்

கோவை ஹோப்ஸ்காலேஜ் பகுதியில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான தர்சனா பெண்கள் விடுதி செயல்பட்டுவருகிறது. இந்த விடுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் , கல்லூரி மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவரக்ள் தங்கியுள்ளனர். பெண் விடுதி காப்பாளராக புனிதா என்பவர் பணியாற்றி வருகிறார். அண்மையில் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அதற்காக பிறந்த நாள் விழாவை கொண்டாட, விடுதியில் இருந்த மாணவிகள் உட்பட 6 பெண்களை விடுதி காப்பாளர் புனிதா அழைத்து சென்றுள்ளார். 

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பெண்களிடம் ஜெகநாதன், தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாதியிலேயே உணவகத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தங்களது வீட்டில் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விடுதிக்கு வந்து விடுதி நிரவாகத்தினரிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டனர். மேலும் விடுதியில் தங்கியிருந்த பெண்களை அழைத்து சென்றதோடு, அவர்களின் எதிர்காலம் கருதி காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும் முன்வரவில்லை.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விடுதி அருகே பூ வியாபாரம் செய்யும் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை பீளமேடு காவல்துறையினர். விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் புனிதா மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, மற்றும் மிரட்டல் விடுத்தல் அகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மெற்கொண்டு வருவதோடு தலைமறைவாகியுள்ள விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் விடுதி காப்பாளர் புனிதாவை தேடி வருகின்றனர்.

விடுதியில் தங்கியிருந்த பெண்களை தவறாக பயன்படுத்த முயன்ற இந்த சம்பவம் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது