தமிழ்நாடு

அடுத்த 6 மணி நேரத்தில் கடுமையான சூறாவளி புயல் - எச்சரிக்கும் மேலாண்மை ஆணையம்

அடுத்த 6 மணி நேரத்தில் கடுமையான சூறாவளி புயல் - எச்சரிக்கும் மேலாண்மை ஆணையம்

webteam

அடுத்த 6 மணி நேரத்தில் கடுமையான சூறாவளி புயல் இருக்கும் என தமிழ்நாடு தேசிய மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயலானது நாளை மாலை அல்லது இரவு காரைக்கால் மாமல்லபுரம் அருகே கரையைக்கடக்கும் எனத் தெரிகிறது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர் கால அடிப்படையில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அடுத்த ஆறு மணி நேரத்தில் கடுமையான சூறாவளி புயல் இருக்கும் என தேசிய மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">IMD <br>தென்மேற்கு வங்காள விரிகுடாவில் &#39;நிவார்&#39; என்ற சூறாவளி புயல் கடலூருக்கு கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கில் 350 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 410 கி.மீ கிழக்கு தென்கிழக்காகவும் நகர்ந்தது .. இது அடுத்த 06 மணி. நேரத்தில்கடுமையான சூறாவளி</p>&mdash; TN SDMA (@tnsdma) <a href="https://twitter.com/tnsdma/status/1331273283862364162?ref_src=twsrc%5Etfw">November 24, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இது குறித்து தேசிய மேலாண்மை ஆணையம் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ தென்மேற்கு வங்காள விரிகுடாவில் 'நிவர்' என்ற சூறாவளி புயல் கடலூருக்கு கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கில் 350 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 410 கி.மீ கிழக்கு தென்கிழக்காகவும் நகர்ந்துள்ளது. இதனால் அடுத்த ஆறு மணிநேரத்தில் கடுமையான சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது" என தேசிய மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.