தமிழ்நாடு

தொடர்கதையாகும் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிவு - கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

தொடர்கதையாகும் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிவு - கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

sharpana

”பிளஸ் டூ மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மாவட்ட கல்வித்துறை விசாரணை நடத்தும் நிலையில் முழுமையாக ஆராய்ந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்” என்கிறார்கள் கல்வியாளர்கள்.

12 ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. இதில், கணிதப் பாடத்திற்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்தது. ஏற்கனவே, முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களின் வினாத்தாள்களும் தேர்வுக்கு முன்பே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இரண்டாம் திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிவுக்கே இடமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த சூழலில் இந்த சம்பவம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. வினாத்தாள் அச்சடிக்கும் நடைமுறையில் ரகசியத்தன்மை குறைந்துவிட்டதே இதற்கு காரணம் என்கிறது ஆசிரியர் சங்கம்.