கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பச்சைக்கிளி வாழ்வதற்காக குளிர்சாதன பெட்டியை பெண் ஒருவர் ஒதுக்கியுள்ளார்.
மரங்களில் கூடு கட்டி வாழும் பச்சைக் கிளிகளை வழக்கமாக வனம் சார்ந்த பகுதிகளில், வயல் வெளிகளில், விவசாய தோட்டங்களில் காணலாம். பறவை வளர்ப்பில் ஆர்வம் கொண்டோர் அதனை வீட்டில் வளர்க்க அதற்கென கூண்டுகளை செய்து அதில் கிளிகளை பராமரிப்பது வழக்கம். ஆனால் பச்சைக்கிளி வாழ்வதற்காக குளிர்சாதன பெட்டியை பெண் ஒருவர் ஒதுக்கியுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜம்ருத்பேகம். கடந்த 5 ஆண்டுகளாக பச்சைக்கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு 'அஞ்சு' என்ற பெயரிட்டு ஆசையுடன் அழைத்து வந்தார். அந்த கிளி ஒருநாள் வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டிக்குள் சென்று, அதிலிருந்து வெளியே வராமல் ஆசையுடன் உள்ளேயே இருந்து கொண்டது. கிளிக்கு குளிர்சாதன பெட்டி பிடிப்பதை உணர்ந்த ஜம்ருத்பேகம் கிளிக்காகவே குளிர்சாதன பெட்டியை தற்போது ஒதுக்கிவிட்டார்.
குளிர்சாதனபெட்டிக்குள் இருக்கும் குளிரும், தனிமையும் கிளிக்கு பிடித்திருப்பதாக ஜம்ருத்பேகம் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.