தமிழ்நாடு

பி.ஜி.ஆர். எனர்ஜி ஒப்பந்தம்: ஆதாரங்களைக் காட்டினால் விளக்கமளிப்பேன் - செந்தில் பாலாஜி

பி.ஜி.ஆர். எனர்ஜி ஒப்பந்தம்: ஆதாரங்களைக் காட்டினால் விளக்கமளிப்பேன் - செந்தில் பாலாஜி

Sinekadhara

பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் விதிமீறல் இருப்பதாக குற்றஞ்சாட்டுபவர்கள் ஆதாரங்களைக் காட்டினால் விளக்கமளிக்க தயாராக உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்துக்காக, நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்துடன் விதிகளை மீறி தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். பி.ஜி.ஆர். நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடமும் அண்ணாமலை புகார் அளித்தார்.

இதுகுறித்து ஏற்கெனவே பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்தத் திட்டம் குறித்து அண்ணாமலைக்கு புரிதல் இல்லை என்றும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் அவர் பேசி வருவதாகவும் பதிலளித்தார். இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி, பி.ஜி.ஆர் டெண்டர் விவாகரத்தில் சிலர் விளம்பரத்துக்காக குற்றம்சாட்டி வருவதாக விமர்சித்தார்.