தமிழ்நாடு

அரசுப்பள்ளி பயோமெட்ரிக்கில் இந்தி: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அரசுப்பள்ளி பயோமெட்ரிக்கில் இந்தி: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

webteam

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவிகளில் இனி இந்தி சேர்க்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகைக்கான பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கருவியின் பழைய பதிப்பில் ஆங்கில மொழி மட்டுமே இருந்தது. 

சில நாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக்கின் பதிப்பு மாற்றப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயோமெட்ரிக் கருவிகளில் ஆங்கிலத்துடன், இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது. 

இந்நிலையில், இனி பயோமெட்ரிக் கருவிகளில் இந்தி இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.