தமிழ்நாடு

ரேஷன் கடையில் தரமற்ற அரிசி என பெண் புகார்: உடனடியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்த அமைச்சர்

ரேஷன் கடையில் தரமற்ற அரிசி என பெண் புகார்: உடனடியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்த அமைச்சர்

webteam

மதுரையில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில் உடனடியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ சம்பந்தப்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.

மதுரை பெத்தானியாபுரம் பாண்டியராஜபுரப் ரேஷன் கடை எண் 006-ல் ரேஷன் அரிசி சரியில்லை மற்றும் எடை குறைவாக உள்ளது எனவும் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் புகார் தெரிவித்தார். மேலும் அரிசி இப்படித்தான் இருக்கும் எனவும் வேண்டுமென்றால் வாங்குங்கள் இல்லையென்றால் செல்லுங்கள் என விற்பனையாளர் மக்களை உதாசினப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

அந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் செல்லூர் ராஜூ உடனடியாக இருசக்கர வாகனத்தில் சென்று அந்த குறிப்பிட்ட ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் மோசடி நடப்பது தெரியவந்ததையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விற்பனையாளர் தர்மேந்திரனை பணி இடைநீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.