தமிழ்நாடு

 “எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது” : செல்லூர் ராஜூ

 “எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது” : செல்லூர் ராஜூ

webteam

எகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

சென்னை கீழ்பாக்கத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திலேயே அடுத்த வாரம் 25 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு விற்கப்பட உள்ளது. வெங்காயவரத்து அதிகமாக இருப்பதால் வரும் காலங்களில் வெங்காயம் விலை கணிசமாக குறையும். 

எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும். இதயத்திற்கும் நல்லது. எகிப்து வெங்காயத்தின் தன்மையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியே சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.