தமிழ்நாடு

முருகா என்றால் சீமான் முகமே மக்களுக்கு நினைவுக்கு வரும் - சீமான்

முருகா என்றால் சீமான் முகமே மக்களுக்கு நினைவுக்கு வரும் - சீமான்

webteam

'வேல்'ஐ வைத்துக்கொண்டு பாஜக அரோகரா போட்டாலும் முருகா என்றால் மக்களுக்கு சீமான் முகமே நினைவுக்கு வரும் என சீமான் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,

1956ல் நவம்பர் 1ம்தேதி மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதுவரை சென்னை மாகாணமாக இருந்த இந்த நிலப்பரப்பு கர்நாடகா, ஆந்திரா, கேரளா என பிரிந்தது. இங்கே சென்னை மாகாணம் என்றே அழைக்கப்பட்டது. அதற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டவேண்டுமென்று பெருந்தமிழர் சங்கரலிங்கம் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். அன்றைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. அண்ணா முதலமைச்சராக ஆனபிறகு தமிழ்நாடு என பெயரிட்டார்கள்.

இங்குள்ள திராவிட கட்சிகள் அண்ணா தமிழ்நாடு என பெயரிட்ட நாளை கொண்டாட வேண்டும் எனக் கூறுகிறார்கள். பிள்ளை பிறந்தநாளைத்தான் கொண்டாடுவார்களே தவிர பெயர் வைத்த நாளை அல்ல. இன்று தான் மாநில எல்லை பிரிக்கப்பட்டு நமக்கென்று தேசப்பரப்பு பிறந்த நாள். அந்த எல்லைகளை பாதுகாக்க முன்னோர்கள் உயிர்நீத்தார்கள். அவர்களை போற்றும் நாளாகவும் இந்த நாளை நாங்கள் போற்றி வருகிறோம்.

மூதாதையர் முருகன் என நான் வேல் தூக்கியபோது என்னை இழிவு பேசினார்கள். அப்போதெல்லாம் எனக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. முருகன் பிறந்தநாளுக்கு விடுமுறை கேட்டபோது எனக்கு ஆதரவாக யாருமே வரவில்லை. பாஜகவுக்கு இப்போது அரசியலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. பல பிரச்னைகளை மறைக்க வேல் யாத்திரை செல்கிறது பாஜக. மக்கள் பிரச்னையை சரி செய்ய பாஜக நிற்காது. ஏனென்றால் பாஜகவால்தான் பிரச்னையே. வேலை எடுத்துக்கொண்டு செய்யும் அரசியல் வெல்லாது. வேல் ஐ வைத்தே நாங்கள் பாஜகவை அரசியல் களத்தில் வீழ்த்துவோம். என்னதான் 'வேல்'ஐ வைத்துக்கொண்டு பாஜக அரோகரா போட்டாலும் முருகா என்றால் மக்களுக்கு சீமான் முகமே நினைவுக்கு வரும்” என்றார்.