seeman pt
தமிழ்நாடு

விஜய் கட்சி தொடங்குவது ஒரு ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்.. சீமான் பேட்டி

யுவபுருஷ்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ”காவிரி நதிநீர், கச்சத்தீவு, மீத்தேன் உள்ளிட்ட எதை பற்றியும் பாஜகவுக்கு கவலை இல்லை. தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ஏதாவது ஒரு நன்மை நடந்துள்ளது என்பதை சொல்லட்டும். ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் செல்லாது என தெரிவிப்பது மட்டும்தான் பாஜக” என்றார்.

அப்போது, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்குவது ஒரு ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். அண்ணன் மட்டும்தான் தமிழகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருப்போம் என விஜய் நினைப்பார். நல்ல ஆட்சி, நல்ல அரசை உருவாக்க வேண்டும். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனினும் தகுதியான 40 பிள்ளைகளை நிறுத்துகிறேன். 20 ஆண்கள், 20 பெண்கள் போட்டியிடுகின்றனர். சட்டமன்ற தேர்தலில் மட்டும்தான் நான் போட்டியிடுவேன்” என்று கூறினார்.