சீமான், நாம் தமிழர் கட்சி PT
தமிழ்நாடு

”தொடங்குவது எளிது... தொடர்வது கடினம்”- விஜய்யின் அரசியல் கட்சி குறித்து சீமான் பேட்டி

Jayashree A

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை இன்று தொடங்கி இருக்கிறார் நடிகர் விஜய். அரசியல் என்பது புனிதமான பணி.. தொழில் அல்ல என்றும், வருகின்றன நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்பு கட்சியின் கொள்கை, கொடி சின்னம் உள்ளிட்டவை வெளிப்படுத்தப்படும் எனவும், ஒப்புக்கொண்ட படத்தை முடித்தபின் முழுமையாக சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல் பணியை மேற்கொள்வது என்ற முடிவை எடுத்துள்ளார் விஜய்.

இதுகுறித்து சீமான் பேசும்போது ”தொடங்குதல் எளிது.. தொடர்வது கடினம். என்னை இனி யாராலும் தோற்கடிக்க முடியாது... ஏன்னா நான் அவ்வளவு தோல்வியை கண்டவன். ஆதலால் இந்தத் தேர்தல் இல்லை என்றாலும் அடுத்த தேர்தல் என்று போய்க்கொண்டே இருப்பேன்.

தொடங்கும்போது இருக்கின்ற ஈடுபாடு கடைசி வரை இருக்க வேண்டும். இன்றைய அரசியல் சூழலில் ஒரு நடிகர் கட்சி ஆரம்பிக்கும்போது, அவரின் ரசிகர் மட்டும் வாக்கு செலுத்தி அரசியலில் வென்று நாட்டை ஆள்வது என்பது கிடையாது. மக்களின் ஆதரவையும் நாம் பெற வேண்டும். இது எம்ஜிஆருக்கு இருந்தது. அவர் பொதுவான மக்களின் ஆதரவு பெற்றிருந்ததால்தான் அவரால் அரசியலில் ஜெயிக்க முடிந்தது. மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும். இவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் பயணம் செய்து கொண்டு இருந்தால்தான் அரசியலை நெருங்க முடியும்” என்றார்.