தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: தொடங்கியது 2 -ஆம் கட்ட வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: தொடங்கியது 2 -ஆம் கட்ட வாக்குப்பதிவு

jagadeesh

தமிழ்நாட்டிலுள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது. 27 மாவட்டங்களிலுள்ள 46ஆயிரத்து 639 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

.

255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2ஆயிரத்து 544 ஒன்றிய வார்டு உறுப்பினர், 4ஆயிரத்து 924 ஊராட்சி தலைவர், 38ஆயிரத்து 916 வார்டு உறுப்பினர் பதவிகள் இதில் அடங்கும். இரண்டாம் கட்டத் தேர்தலில் 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

முன்னதாக 27ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 76 புள்ளி ஒன்று ஒன்பது விழுக்காடு வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இரு தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்படுகிறது.