தமிழ்நாடு

எண்ணெய் கசிவு.. ஆய்வுக்கு அனுப்பப்பட்டது கடல்நீர்

எண்ணெய் கசிவு.. ஆய்வுக்கு அனுப்பப்பட்டது கடல்நீர்

webteam

சென்னை எண்ணூர் அருகே கடற்பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியிலுள்ள ‌மாசடைந்த கட‌‌ல்நீர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எண்ணூர் துறைமுகம் அருகே இரு கப்பல்கள் மோதிக்கொண்டதால் அதிலிருந்த எண்ணெய் கொட்டி, எண்ணூர், மெரினா, எலியட்ஸ் கடற்கரையோரத்தில் படலமாக மிதக்கிறது. கடற்பரப்பில் உள்ள எண்ணெயை அகற்றும் பணிகள் இன்று 8-ஆவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் கடலோர பாதுகாப்பு படை, மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, எண்ணெய் கலந்த கடற்பரப்பில் உள்ள ஆமைகள், மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரிகள் இறந்துள்ள நிலையில் கடல் நீர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எண்ணெய் அகற்றும் பணியில் தேவையான உதவிகளை தமிழக அரசுக்கு செய்யும் படி இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.