தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய அலுவலகத்திற்கு சீல்வைப்பு

கலிலுல்லா

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள விஜயபாஸ்கருக்கு தொடர்பான சந்திரசேகர் என்பவரது அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சீல் வைத்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று சோதனை நடத்தினர். அதில் 23 லட்சம் ரூபாய் பணமும், 4 கிலோ 870 கிராம் தங்க நகைகள் மற்றும்136 கனரக வாகனங்களுக்கான ஆவணங்களும் கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள விஜய பாஸ்கருக்கு தொடர்பான சந்திரசேகர் என்பவரது அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சீல் வைத்தனர். அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததாலும், சந்திரசேகர் வெளியூர் சென்று விட்டதாலும் திறக்கமுடியாததால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்றொரு நாள் சீலை திறந்து சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.