தமிழ்நாடு

வறட்சிப் பகுதியில் விஞ்ஞானப் பூர்வமான ஆய்வு: ககன்தீப் சிங் பேடி

வறட்சிப் பகுதியில் விஞ்ஞானப் பூர்வமான ஆய்வு: ககன்தீப் சிங் பேடி

Rasus

வறட்சி பாதிப்பு குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வு மூலம் பெறப்படும் தரவுகள் அடிப்படையிலேயே மத்திய அரசிடம் வறட்சி நிவாரணம் கோர முடியும் என்பதால் அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதாக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வறட்சி பாதித்த பகுதிகளில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு நடத்தினார். அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர், தமிழக வேளாண் துறை செயலாளர் ககன் தீப் சிங் ஆகியோரும் தங்களது ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, பருவமழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் வறட்சி நிலவுவதாக தெரிவித்தார்.

வறட்சி பாதிப்பு குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வு மூலம் பெறப்படும் தரவுகள் அடிப்படையிலேயே மத்திய அரசிடம் வறட்சி நிவாரணம் கோர முடியும் எனவும் அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். ஆய்வு விவரங்கள் அனைத்தும், தமிழக அரசிடம் ஜனவரி 9-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படும் எனவும், தமிழக அரசு சமர்ப்பிக்கும் அறிக்கையை பொறுத்து மத்திய அரசிடம் இருந்து நிவாரணத் தொகை பெற ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.