அரசு பேருந்தில் பக்கவாட்டு கூறையில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து மேல்விஷாரம் வழியாக வேலூருக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட பணிக்குச் செல்வோரும், பொது மக்களும் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (12.09.2022) மாலை மேல்விஷாரம் வழியாக வேலூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணித்தனர். இதில் ஒருசில மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்தின் பக்கவாட்டு கூறையில் தொங்கியவாரு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
பல்வேறு இடங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் இது போன்று அரசு பேருந்துகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்வதால் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.