SCAM TN POLICE
தமிழ்நாடு

டிஜிபி சைலேந்திரபாபு புகைப்படத்தை பயன்படுத்தி பண மோசடி - காவல்துறை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஆன்லைன் மோசடி தொடர்பாக காவல்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

PT WEB

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் பணம் வேணும் என்று குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர். இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Scam

தமிழகத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பாக காவல்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு சிலருடைய புகைப்படத்தை பயன்படுத்தி தங்களுக்கு மிகவும் அவசரமாக பணம் தேவைப்படுகிறது. என்று கூறி பணத்தை பெற்று அவர்களை ஏமாற்றும் நிலை சமூக வலைதளத்தில் ஏற்பட்டு இருக்கிறது. சிலர் ஏமாந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் தங்களுடைய முகநூல் பக்கத்தை தவறுதலாக பயன்படுத்துவதாகவும் புகார்களும் காவல்துறைக்கு வந்த வண்ணம் உள்ளது.

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் தங்களுக்கு மிகவும் அவசரம் என்றும் உடனடியாக பணம் தேவைப்படுவதாக கூறி சமூக வலைத்தளத்தில் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர் இந்த தகவலானது விழுப்புரம் மாவட்டத்தில் பரவி வருவதாக தெரிய வருகிறது. எனவே இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.