தமிழ்நாடு

முதலமைச்சர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை

முதலமைச்சர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை

Rasus

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ‘தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு பங்கு உள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு வாரத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தடை கேட்டு முதலமைச்சர் பழனிசாமி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு மீதான இன்றைய விசாரணையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

டெண்டரில் முறைகேடு என்றால் டெண்டரை தான் ரத்து செய்திருக்க வேண்டும் என கூறிய நீதிபதி டெண்டரை ரத்து செய்யாமல் முதல்வர் மீது வழக்கு ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.