தமிழ்நாடு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: நீதிபதி விமலா அதிரடி மாற்றம்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: நீதிபதி விமலா அதிரடி மாற்றம்

webteam

18எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், மூன்றாவது நீதிபதியாக நீதிபதி விமலாவுக்கு பதிலாக சத்தியநாராயணனை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் இரண்டு பேரும் மாறுபட்ட தீர்ப்பை அண்மையில் வழங்கினர். அதனால், மூன்றாவது நீதிபதியாக இந்த வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. நீதிபதி விமலாவுக்கு பதிலாக வேறொரு நீதிபதியை நியமிக்க வலியுறுத்தி பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் எஸ்.கே. கவுல், அருண் மிஸ்ரா அமர்வு முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் மூன்றாவது நீதிபதியாக விமலாவுக்கு பதிலாக சத்தியநாராயணனை நியமனம் செய்ய பரிந்துரை செய்த நீதிபதிகள், மனுதாரர்கள் வழக்கைத் திரும்பப் பெற அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், மனுவைத் திரும்பப் பெற தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.