சவுக்கு சங்கர்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

"கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்" - சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட போது சவுக்கு சங்கர் முழக்கம்!

PT WEB

செய்தியாளர் - ஐஸ்வர்யா 

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் கடந்த 4 ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்படுவதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சிகிச்சையில் சவுக்கு சங்கருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. கடந்த வாரம் அவருக்கு மாவுக்கட்ட போடப்பட்ட நிலையில், இன்று மீண்டும் மாற்று கட்ட போட கோவை அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

சவுக்கு சங்கர்

மாவு கட்டை மாற்றி வெளியே வந்த சவுக்கு சங்கர், “கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார்தான் எனது கையை உடைத்ததார். கோவை மத்திய சிறைதான் சவுக்கு சங்கருக்கு சமாதி என்று மிரட்டி வருகின்றனர். கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்” எனக்கூறி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் முழக்கம்மிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின் சிகிச்சை முடித்து சவுக்கு சங்கரை மத்திய சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.