சசிகலா கோடநாடு
தமிழ்நாடு

“தெய்வமாக இருந்து உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பார் அம்மா” – சசிகலா

அதிமுகவை ஒன்றுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் நல்லபடியாக அந்த பணிகள் முடியும் எனவும் கோடநாட்டில் சசிகலா தெரிவித்தார்.

webteam

செய்தியாளர்: சுதீஸ்

நீலகிரி மாவட்டம் கோடநாடுக்கு ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சென்ற சசிகலா, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுவதற்கு முன்பாக சில நிமிடங்கள் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர்...

jayalalitha

“அம்மா இல்லாமல் கோடநாடு வந்திருக்கிறேன், அம்மா நினைவாக வந்திருக்கிறேன். தொழிலாளர்களை பார்ப்பதற்காக வந்திருக்கிறேன். இது போன்ற ஒரு சூழல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் தோட்டத்தில் சிறுவயதில் இருந்தே காவலாளியாக வேலை பார்த்தவர் இந்த இடத்தில் உயிரிழந்துள்ளார்.

நிச்சயமாக தெய்வமாக இருந்து உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பார் அம்மா. அம்மாவிற்காக பூஜை செய்யவும் கோடநாடு வந்துள்ளேன். விரைவில் இங்கு அம்மாவுக்கு சிலை வைக்க உள்ளோம். அதிமுக ஒன்றுபடுவதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டே இருக்கிறேன், நிச்சயம் அந்த பணிகள் நல்லபடியாக முடியும்.

கோடநாட்டில் சசிகலா

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போக வேண்டும். அதுதான் அரசியலுக்கு நல்லது, அந்த மாதிரியான ஒரு சூழ்நிலை வரும்போது நிச்சயமாக அது நடக்கும்” என்றார்.