தமிழ்நாடு

தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம்

தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம்

Rasus

அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பினர், தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த மனுவுக்குப் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நோட்டீசுக்கு சசிகலாவின் தரப்பில் இருந்து டிடிவி தினகரன் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் டிடிவி தினகரன் பதிலை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், அதிகாரப்பூர்வ பதவியில் தினகரன் இல்லை என குறிப்பிட்டிருந்தது. மேலும் மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலா இதுகுறித்து பதில் அனுப்ப வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பியுள்ளார். சசிகலாவின் கடிதத்தை அவரது வழக்கறிஞர்களான ராஜேஷ்குமார், பரணிகுமார் ஆகியோர் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளனர். 70 பக்க அளவில் சசிகலாவின் கடிதம் அமைந்துள்ளது. அதில் புகார் தெரிவித்தவர்கள் எல்லோரும் என்னை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்ய முன்மொழிந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.