தமிழ்நாடு

நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்

நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்

webteam

புதிய பார்வை ஆசிரியர் எம்.நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்பட்ட கல்லீரல் நோய்க்காக அவர் கடந்த 9 மாதங்களாக சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது. கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழப்பு மற்றும் நுரையீரல் நோய்த்தொற்று போன்றவற்றால் அவர் அவதிப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள அந்த உறுப்புகள் இதுவரை தானமாக கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜனின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் குளோபல் மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவின் இயக்குனர் இளங்குமரன் மீண்டும் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.