தமிழ்நாடு

மூன்றாவது பெண் முதலமைச்சராகிறார் சசிகலா

webteam

தமிழகத்தின் மூன்றாவது பெண் முதலமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா பொறுப்பேற்க இருக்கிறார்.

அதிமுக நிறுவனரும், முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, 1987ஆம் ஆண்டு அவரது மனைவி வி.என்.ஜானகி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் 1991ஆம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்ற பிறகு, தமிழகத்தின் இரண்டாவது பெண் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். அவரது மறைவுக்குப் பிறகு, தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ள சசிகலா, தமிழகத்தின் 12ஆவது முதலமைச்சராக இருப்பார்.

தமிழகத்தின்‌ மூன்று பெண் முதலமைச்சர்களுமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிக காலம் முதல்வராக இருந்த‌ பெருமை ஜெயலலிதாவை சேரும். இவர்கள் மூவரில் தேர்தலைச் சந்தித்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தார். எம்.ஜி.ஆர். மரணமடைந்ததும், அதிமுக எம்.எல்.ஏ.க்களால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட வி.என்.ஜானகி, அடுத்த தேர்தலில் கண்ட தோல்வியால், ஒருங்கிணைந்த அதிமுக ஏற்பட வழிவிட்டு விலகிக் கொண்டார். இப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்களால் முதலமைச்சர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இனிமேல்தான் தேர்தலை சந்திக்க உள்ளார்.