செய்தியாளர்: வி.சார்லஸ்
திருச்சியில் ரூ.1112 கோடி செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட இரண்டாவது முனையம் ஜூன் மாதம் 11-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சி பன்னாட்டு விமான நிலைய இரண்டாவது முனையத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. புறப்பாடு பகுதியில் வைக்கப்பட்டுள்ள அந்த கல்வெட்டில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழியோடு சமஸ்கிருதத்தையும் கூடுதலாக சேர்த்து வைத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு பலதரப்பு மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.