தமிழ்நாடு

தமிழகத்திற்கு 19 புவிசார் குறியீடுகளை பெற்றுத் தந்த சஞ்சய் காந்தி!

தமிழகத்திற்கு 19 புவிசார் குறியீடுகளை பெற்றுத் தந்த சஞ்சய் காந்தி!

webteam

தமிழகத்திற்கு 19 புவிசார் குறியீடுகளை பெற்றுத் தர காரணமாக இருந்தவர் தஞ்சையைச் சேர்ந்த சஞ்சய் காந்தி ஆவார்

தஞ்சாவூர் மாவட்டம் பொன்னாப்பூரை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக பணி புரிந்தவர்.  தமிழக அரசு புவிசார் குறியீடு ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.பாரம்பரியமிக்க பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்க இவர் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். 

பொருட்களின் வரலாறு, கலாச்சாரம் சார்ந்த விஷயங்கள் உள்ளிட்ட பல ஆய்வுகளை தொடர்ந்து புவிசார் குறியீடுகளை பெற்று வருகிறார். ஆராய்ச்சிகளில் உள்ள ஆர்வத்தினால் தனது திருமணத்தை தள்ளிவைத்த சஞ்சய்காந்திக்கு 43 வயதில் நாளை திருமணம் நடைபெறவுள்ளது.

இவரது ஆய்வு மற்றும் முயற்சியின் காரணமாக தமிழகத்திற்கு கிடைத்த புவிசார் குறியீடுகள் :

1.தஞ்சாவூர் கலைத்தட்டு
2.தஞ்சாவூர் ஓவியம்
3.தஞ்சை வீணை
4.தஞ்சை தலையாட்டி பொம்மை
5.நாஞ்சியார்கோவில் குத்துவிளக்கு
6.சாமிமலை வெண்கலச்சிலை
7.நாகர்கோவில் கோயில் ஆபரணங்கள்
8.பத்தமடை பாய்
9.திருபுவனம் பட்டுப்புடவை
10.காஞ்சி சில்க் புடவை
11.பவானி ஜமுக்காலம்
12.மதுரை சுங்குடிபுடவை
13.ஆரணி சில்க் புடவை
14.சேலம் வெண்பட்டு
15.கோவை கோரா காட்டன்
16.திண்டுக்கல் பூட்டு
17.காரைக்குடி கண்டாங்கி புடவை
18.ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா