தமிழ்நாடு

"சலூன் கடைகள் திறக்க அனுமதியில்லை"-காவல்துறை தகவல் !

"சலூன் கடைகள் திறக்க அனுமதியில்லை"-காவல்துறை தகவல் !

jagadeesh

ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை நம்பவேண்டாம் என தமிழக காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

காலை 7 மணி முதல் 10 மணி வரை சலூன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதற்கு தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ஊரடங்கு நேரத்தில் சமூக வலைத்தளங்களில் பரவும் தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா நிவாரண நிதி அளியுங்கள் என அழைப்பு வந்தால் விழிப்புணர்வுடன் இருங்கள் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதனை பயன்படுத்தி பிரதமர், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளியுங்கள் என அரசு கூறும் வகையில் அறிவிப்பு இணையத்தில் பரவி வருகிறது. மேலும் தொலைபேசி வாயிலாகவும் அக்கும்பல் நிதி மோசடியில் ஈடுபடுட்டு வருவதாக கூறப்படும் நிலையில், நிதியுதவி‌ அளிக்கும் போலி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.