ஓமலூர் - திமுக பரப்புரை கூட்டத்தில் பாம்பை கழுத்தில் அணிந்தபடி வந்த இளைஞர் pt desk
தமிழ்நாடு

சேலம்: பாம்புடன் பரப்புரை கூட்டத்திற்கு வந்த இளைஞரால் பரபரப்பு

ஓமலூர் அருகே திமுக பரப்புரை கூட்டத்திற்கு பாம்பை கழுத்தில் அணிந்தபடி வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இளைஞர் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

webteam

செய்தியாளர்: தங்கராஜூ

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் செல்வகணபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மக்களை சந்தித்து செல்வகணபதி பரப்புரை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த கூட்டத்திற்கு வந்த ஒரு இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

Election campaign

அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வயல் வெளியில் சுற்றித்திரிந்த நல்ல பாம்பு ஒன்றை பிடித்து, கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த பகுதியை சுற்றிச் சுற்றி வலம் வந்தார். இரண்டு கைகளிலும் பாம்பை பிடித்துக் கொண்டும், பரப்புரை நடந்த பகுதிக்கு வந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து அங்கு காவலுக்கு இருந்த போலீசார், அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

ஆனால், அந்த இளைஞர் பரப்புரை முடியும் வரை, அந்தப் பகுதியை சுற்றிச் சுற்றி வந்தார். பரப்புரை முடிந்த பிறகு. பாம்பை கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த இளைஞர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அந்த இளைஞர் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.