சேலம் அருகே வறண்ட கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி இரண்டு நாட்களுக்குப் பின் லேசான காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த கூடமலை பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். கணவர் உயிரிழந்தவிட்ட நிலையில் தனிமையில் வசித்து வந்த 60 வயதான வள்ளியம்மாள் கடந்த இரண்டு நாட்ளாக வீட்டிற்கு வரவில்லை. இதையறிந்த உறவினரகள் வள்ளியம்மாளை ஆங்காங்கே தேடிவந்துள்ளனர்.
இந்த நிலையில் கூடமலை கிராமத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஒரு மூதாட்டி தவித்து வருவதாக அவ்வழியே ஆடுமேய்த்து சென்ற ஒருவர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கயிறு வாயிலாக மூதாட்டி வள்ளியம்மாளை பத்திரமாக மீட்டனர்.
அவ்வப்போது மனநிலை பாதிக்கப்படும் வள்ளியம்மாள் கடந்த ஞாயிற்று கிழமையன்று கிணற்றி தவறி விழுந்துள்ளார் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 40 அடி ஆழம் கொண்ட வறண்ட கிணற்றில் இரண்டு நாட்களாக தவித்த 60 வயது மூதாட்டி நல்வாய்ப்பாக உயிருடன் மீட்கப்பட்டு, லேசான காயங்களோடு சிகச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்