சேலம் மாநகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத தனியார் பேருந்து நிறுவனத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி டெங்கு ஒழிப்பு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது எல்.ஆர்.என் எனும் தனியார் பேருந்து நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், பேருந்து நி்றுவனத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் நரசோதிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியபட்டதால், பள்ளி நிர்வாகத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்தார். அத்துடன் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.