தமிழ்நாடு

தூய்மையே சேவை இயக்கம்‌: தொடங்கி வைத்தார் சேலம் ஆட்சியர் ரோகிணி

webteam

தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிக‌ளை தூய்மை செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

தூய்மையே சேவை இயக்கம் சேலம் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி சாரண, சாரணிய மாணவர்களை கொண்டு மாநகரின் முக்கியமான இடங்கள் சுத்தம் செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ரோகிணி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற தூய்மைபடுத்தும் பணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி, கையுறைகளை மாட்டிக்கொண்டு அவரும் சாலையில் இறங்கி சாலையோரத்தில் தேங்கியிருந்த குப்பைகளை அள்ளி, குப்பைகளை சேகரிக்கும் வாகனத்தில் கொட்டினார். இதனை பார்த்த பள்ளி மாணவர்களும் சற்றும் கூச்சப்படாமல், குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கினர். இதேபோல் சேலம் மாநகர் பகுதியில் போஸ் மைதானம், அருங்காட்சியகம், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.