சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வுக்குச் சென்ற ஆட்சியர் ரோஹிணி காரை மக்கள் முற்றுகையிட்டனர்.
டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு ஒழிப்பு பணியில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 15 நாட்கள் ஈடுபட வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஆத்தூரை அடுத்த முல்லைவாடி பகுதியில் இன்று மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தங்கள் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடுகள் குறித்து பல முறை தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவதாக மக்கள் புகார் கூறினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆட்சியர் புறப்பட்ட நிலையில் அவரது காரை சிலர் மறித்தனர். அவர்களை அப்புறப்படுத்திய காவல்துறையினர் ஆட்சியரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.