தமிழ்நாடு

"பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும்" கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த மாணவி

"பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும்" கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த மாணவி

kaleelrahman

சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்

மாங்காடு சக்தி நகரைச் சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில், மூத்த மகள் தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இரண்டாவது மகள் பூவிருந்தவல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், அறைக்குள் சென்ற இரண்டாவது மகள் வெகு நேரமாகியும் வரவில்லை.  இதனையடுத்து அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்கத் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில தினங்களாக அந்த மாணவி நெருக்கமான தோழிகளிடம் பேசாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இவர் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் பாலியல் தொல்லைக்கு ஆளானது போன்று எழுதி வைத்து இருந்தார். மேலும் டீச்சர், ரிலேஷன்ஸ் நம்ப வேண்டாம் எனவும் பாதுகாப்பான இடம் கல்லறையும் ,தாயின் கருவறையும் என உருகமாக எழுதியுள்ளார்.

ஆனால், தற்கொலைக்கான காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியன் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்லமனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லைதற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறதுஅதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றனஅவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலைஆர்.புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)