தமிழ்நாடு

சோடா பாட்டில் வீச எங்களுக்கும் தெரியும்: ஜீயர் பேச்சு

சோடா பாட்டில் வீச எங்களுக்கும் தெரியும்: ஜீயர் பேச்சு

rajakannan

கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் என்று ஜீயர் சடகோப ராமானுஜர் கூறியுள்ளார்

தனியார் பத்திரிக்கை நடத்திய நிகழ்வு ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார். அவர் ஆண்டாளின் பிறப்பு குறித்து தவறுதலாக பேசிவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு தமிழகம் முழுக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, ஜீயர் சடகோப ராமானுஜர் ஆண்டாள் கோவிலில் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இருப்பினும் பிப்ரவரி 3-ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறினார். 

இந்நிலையில், பிப்ரவரி 3-ம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என சடகோப ராமானுஜ ஜீயர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். மேலும், “கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் ஆனால் செய்ய மாட்டோம். ஆனால், இறை நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும், இனி அமைதியாக போகமாட்டோம்” என்று கூறினார்.