தமிழ்நாடு

ஹார்வர்டு இருக்கைக்கு எதிரான வதந்திகள் பொய்யானவை: செயற்குழு விளக்கம்

ஹார்வர்டு இருக்கைக்கு எதிரான வதந்திகள் பொய்யானவை: செயற்குழு விளக்கம்

Rasus

ஹார்வர்டு தமிழ் இருக்கை‌க்கு எதிராக பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் பொய்‌யானவை என தமிழ் இருக்கை அமைப்பின் செயற்குழு விளக்கம் அளித்துள்ளது. வதந்திகளை திட்டமிட்டு உருவாக்குபவர்கள் தனிப்பட்ட உள்நோக்கங்களுக்காகவும், நீண்ட நாளைய அரசியல் காரணங்களுக்காகவும் செய்கின்றனர் என்றும் தமிழ் இருக்கை குற்றம்சாட்டியுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகம் தமிழர்களை ஏமாற்றி நிதி திரட்டுவதாக வதந்தி பரவுகிறது என்றும், தமிழர்களிடம் நிதிதிரட்டி ஹார்வர்டு தன் நோக்கத்தை செயல்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை என குறிப்பிட்டுள்ளது. தமிழ் இருக்கை குழுதான் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை அணுகி தமிழ் இருக்கை வேண்டுமென வேண்டுகோள் விடுத்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக ஓலைச்சுவடிகளை மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் திருடிக்கொண்டு போகும் என்பது போன்ற செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், செயல்பாடுகளில் தொடர்ந்து கவனமாக கையாளுவோம் என்று தமிழ் இருக்கை உறுதி அளித்துள்ளது. வதந்திகளுக்கு முக்கியத்துவம் தராமல் இருந்த நிலையில், நன்கொடையாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுவதால் சிறு விளக்கம் தர தமிழ் இருக்கை கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.