கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் ரப்பர் மரங்களில் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை, களியல், குலசேகரம், ஆறுகாணி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால், சிறு குறு ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் மழைக் காலங்களில் இதுபோன்று பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ரப்பர் தொழிலாளர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக பல ஆண்டுகள் முறையிட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குறை கூறியிருந்தனர். தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அதிகமாக ரப்பர் தொழில் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.