தமிழ்நாடு

கட்டட விபத்தில் மீட்கப்பட்ட சிறுமியின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி

கட்டட விபத்தில் மீட்கப்பட்ட சிறுமியின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி

webteam

திருச்சி அடிக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் ஆறு மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட சிறுமியின் பெயரில் வைப்பு நிதியில் 5 லட்ச ரூபாய் வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த கார்த்திக் மற்றும் பழனியின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், லேசான காயம் அடந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட பழனி என்பவரின் மகள் பரமேஸ்வரியின் பெயரில் 5 லட்ச ரூபாய் வைப்பு நிதியாக வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வைப்பு நிதியின் மூலம் மாதம் 4062 ரூபாய் சிறுமியின் குடும்பத்திற்கு கிடைக்கும். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின்‌ குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் மு‌தலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.