தமிழ்நாடு

பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண் எஸ்ஐக்கு இழப்பீடு

webteam

பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண் எஸ்ஐக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. 

பெண் எஸ்ஐ கடந்த 2010ம் ஆண்டு அளித்த புகாரை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வந்தார். அந்தப் புகார் தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை அவர் அளித்துள்ளார். அதில், குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமைக் காவலர் செந்தாமரைக்கண்ணனை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்றும், பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத முன்னாள் கண்காணிப்பாளர் ராஜசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தார். 

மேலும், பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண் எஸ்ஐக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரைத்த நீதிபதி ஜெயசந்திரன், தலைமைக் காவலர் செந்தாமரைக்கண்ணனிடம் இருந்து 3 லட்சம் ரூபாயும், காவல்துறை முன்னாள் கண்காணிப்பாளர் ராஜசேகரனிடம் இருந்து 2 லட்சம் ரூபாயும் வசூலித்து செலுத்தவும் உத்தரவிட்டார். போலீஸார் மீதே பாலியல் புகார் வந்தால், டிஜிபி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் நீதிபதி டி.ஜெயச்சந்திரன் பரிந்துரைத்தார்.