தமிழ்நாடு

ரூ.236 கோடியில் திட்டங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

ரூ.236 கோடியில் திட்டங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

webteam

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.236 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், மொத்தம் 1,098 திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். நெல்லை மருத்துவக்கல்லூரியில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல ஓய்வுதிய மையம் மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி விடுதி கட்டடத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார். தூத்துக்குடி நாகலாபுரத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிக்கான கட்டடமும் விழாவில் திறந்து வைக்கப்பட்டது.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர், வறட்சி காரணமாகக் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக, ரூ.350 கோடியில் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. நகர்ப்புறங்களில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனுக்காக எண்ணற்றத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், மேலும் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தப்படுகின்றன எனவும், பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்தார்.