தமிழ்நாடு

ரூ.2000, மளிகைப் பொருட்கள் தொகுப்பு இன்றுமுதல் விநியோகம்

ரூ.2000, மளிகைப் பொருட்கள் தொகுப்பு இன்றுமுதல் விநியோகம்

webteam

தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாவது தவணையாக இரண்டாயிரம் ரூபாய் ஆகியவை நியாயவிலைக் கடைகள்மூலம் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

இந்த நிவாரணத்தை வழங்குவதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு தேதி குறிப்பிட்டு ஏற்கெனவே டோக்கன் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவரவருக்கு அளிக்கப்பட்டுள்ள தேதியில் நிவாரணப் பொருட்கள் மற்றும் 2000 ரூபாயை பெற்றுக்கொள்ளலாம். இந்தப் பொருட்கள் இம்மாதம் இறுதிவரை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவாரணப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கண்காணிப்படும் என்றும், நிவாரணமாக அளிக்கப்படும் மளிகைப் பொருட்களை வெளிச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் முதல் தவணையாக 2000 ரூபாய் கடந்த மாதம் வழங்கப்பட்டது. பின்னர் கொரோனா நிவாரணமாக 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இவற்றை வழங்கும் பணியை அவர் கடந்த 3ஆம் தேதி தொடங்கி வைத்தார்.