தமிழ்நாடு

ஏடிஎம்-மில் 20 ரூபாய்: வாடிக்கையாளர் அதிர்ச்சி

Rasus

கோவையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றில் 20 ரூபாய் நோட்டுகள் வந்ததால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், ஏடிஎம்முக்கு பூட்டுபோட்டார்.

கோவை சவுரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். மருத்துவ தேவைக்காக 50,000 ரூபாய் தேவைப்பட்ட நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது முதற்கட்டமாக 10,000 ரூபாயை எடுக்க அதற்கான தொகையை பதிவு செய்திருக்கிறார் காளிதாஸ். ஆனால் இரண்டாயிரம் ருபாய் நோட்டுகள் 4 மற்றும் 1 இருபது ரூபாய் என மொத்தமாக 8 ஆயிரத்து 20 ரூபாய் மட்டுமே ஏடிஎம்-மில் இருந்து வந்திருக்கிறது. ஆனாலும், அவரது கணக்கில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதனால் காளிதாஸ் அதிர்ச்சி அடைந்தார்.

ஏடிஎம்-மில் இருந்து 20 ரூபாய் நோட்டு வந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியிடம் கேட்டிருக்கிறார் காளிதாஸ். ஆனால் அவர்கள் முறைப்படி பதிலளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திமடைந்த காளிஸ்தாஸ் ஏடிஎம்-மிற்கு பூட்டுப்போட்டார். ஏடிஎம்-மில் இருந்து 20 ரூபாய் வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.