தமிழ்நாடு

போக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்!

போக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்!

webteam

கோவையில் நடப்பாண்டில் மட்டும் போக்குவரத்து விதி‌களை மீறியவர்களிடம் 2 கோடியே 9 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களால் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அதன் காரணமாக விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி கோவை மாநகரில் நடப்பாண்டில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் 2 கோடியே 9 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 

இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணியாமலும், 31 ஆயிரத்து 755 பேர் விதி மீறி சிக்னலை கடந்ததிலும், 33 ஆயிரத்து 818 பேர் சீட் பெல்ட் அணியாமலும் அபராதம் செலுத்தியுள்ளனர். 

இதேபோல் 15 ஆயிரத்து 42 பேர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதற்காகவும், 7 ஆயிரத்து 540 பேர் அதிவேக‌‌மாக வாகனம்‌ ஓட்டியதற்காகவும் அபராதம் செலுத்தியுள்ளனர்.