தமிழ்நாடு

நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1,000 கோடி விடுவிப்பு

நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1,000 கோடி விடுவிப்பு

JustinDurai

நகைக்கடன் தள்ளுபடிக்கு ரு.1,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் நிறைவு நாளில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். நகைக்கடன் தள்ளுபடி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடிக்காக ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதுவரை 5,48,000 கடன்களுக்கு தள்ளுபடி ரசீது கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 3 நாட்களில் மீதமுள்ள பயனாளிகளுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: தமிழகம் ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம்-பேரவையில் பி.டி.ஆர். சொன்ன காரணம்?