உலக வங்கி கடனுதவியுடன் ரூ 3,042 கோடியில் நீர், நில வள திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கலான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், சாலைகள் அகலப்படுத்தும் பணி, புதிய பாலங்கள் கட்ட ரூ. 3,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர்வள ஆதார துறைக்கு ரூ.4791 கோடியும், சுற்றுசூழல் வனத்துறைக்கு ரூ.587 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வறட்சியை சமாளிக்க புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,508 கோடி செலவில் நான்கு வழிச்சாலைகள் தரம் உயர்த்தப்படும் எனவும், 1000 கிராமப்புற கோயில்களை புதுப்பிக்க தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மின்சாரம்- எரிசக்தித் துறைக்கு ரூ.16,998 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் 3 ஆயிரத்து 42 கோடியில் நீர் நில வளத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.