ரவுடி நாகேந்திரன் முகநூல்
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு | கைதான ரவுடி நாகேந்திரன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகிவுள்ளது.

ஜெ.அன்பரசன்

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகிவுள்ளது.

அதில், தனது மகன் அஸ்வத்தாமனின் அரசியல் வளர்ச்சிக்கு ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்ததால், கொலை செய்ய திட்டமிட்டதாக ரவுடி நாகேந்திரன் கூறியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டம் குறித்து தனது மகன் அஸ்வத்தாமன் வழியாக வழக்கறிஞர் அருள் கூறியதாகவும், அதற்கு மொத்த செலவையும் தாம் ஏற்பதாக உறுதியளித்ததாகவும் நாகேந்திரன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலையை பயன்படுத்திக் கொண்டதாகவும், தனது மகனுக்காக சிறையில் இருந்தவாறே ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியதாகவும், அவரது ஆதரவாளர்களையும் இதுதொடர்பாக எச்சரித்ததாகவும் அவர் கூறியதாக காவல்துறை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.