தமிழ்நாடு

பங்குனி உத்திரத் திருவிழா நேரத்தில் வெறிச்சோடி காணப்படும் பழனி!!

webteam

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற வேண்டிய நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் ஊரே வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள்,
தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து பொதுமக்களும் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற தேவைகளுக்கு வெளியே வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எப்பொழுதும் சத்தத்துடனும், பரபரப்புடனும் இயங்கும் சாலைகள் இன்று அமைதியின் உருவமாக மாறியிருக்கின்றன.

இந்நிலையில் பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற வேண்டிய நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் ஊரே வெறிச்சோடி
காணப்படுகிறது. அறுபடை வீடுகளில் ஒன்றான பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழாவில் பல லட்சம் பேர் பங்கேற்பது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டோ, பங்குனி உத்தரத் திருவிழா, கொரோனா அச்சுறுத்தல் ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கோலாகல விழா நேரத்தில் வெறிச்சோடி இருக்கிறது பழனி. அரோகரா முழக்கங்கள் ஒலிக்கும் நேரத்தில் ஊரடங்கின் அமைதியோடு பழனி நகரம் காணப்படுகிறது.