தமிழ்நாடு

தமிழகத்தில் குறைந்து வரும் சாலை விபத்துகள் - புள்ளிவிவரம்   

தமிழகத்தில் குறைந்து வரும் சாலை விபத்துகள் - புள்ளிவிவரம்   

webteam

தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018-ம் ஆண்டில் குறைந்துள்ளதாக அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காவல்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டின்படி, தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் மொத்தம் 65 ஆயிரத்து 562 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. கடந்தாண்டை பொறுத்தவரையில், சாலை விபத்துகளின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 920. அதாவது, 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்தாண்டு ஆயிரத்து 642 சாலை விபத்துகள் குறைந்துள்ளன. இதேபோல், விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிகையும் குறைந்துள்ளது. 

2017-ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 16 ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டில் ஏற்பட்ட விபத்துகளில் 12 ஆயிரத்து 216 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. 2017-ம் ஆண்டை காட்டிலும் 2018-ம் ஆண்டில் விபத்து உயிரிழப்புகள் 3 ஆயிரத்து 941 குறைந்துள்ளது. 2017-ம் ஆண்டில் 0.06 ஆக இருந்த வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப மரண விகிதம், கடந்த ஆண்டு, 0.05 ஆக குறைந்துள்ளது. 

இந்தாண்டு மார்ச் மாதம் வரை எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி, தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்து 44 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இவ்விபத்துகளில் சிக்கி 2 ஆயிரத்து 774 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு மார்ச் மாதம் வரையிலான சாலை விபத்துகளில், அதிகபட்சமாக சென்னை நகரில் ஆயிரத்து 988 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 340 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.